Jessica Alba: `அது அவர்களின் கனவு! - கலங்கிய பெற்றோர்; நெகிழ்ந்த ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பா

ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை ஜெசிகா ஆல்பா.

13 வயதில் கேம்ப் நோவேரில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஃபென்டாஸ்டிக் ஃபோர்’, ‘இன் டு தி ப்ளூ’ போன்ற பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தி ஐ, எ டேம் டு கில் ஃபார், மச்சேட் கில்ஸ், சின் சிட்டி போன்ற படங்களில் நடித்து ஹாலிவுட்டில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொண்டார்.

ஜெசிகா ஆல்பா

பிரபல நடிகையான இவர் தனது சிறு வயது கனவுகளை தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் அவருடைய பெற்றோருக்கு வீடு ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்திருக்கிறார். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அது அவரின் தந்தை சிறு வயதில் வசித்த வீடு. இதுதொடர்பான வீடியோக்களை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். "என் பெற்றோருக்கு வீடு வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறேன்.

அந்த வீடு என் தந்தை வளர்ந்த எனது தாத்தா- பாட்டியின் வீடு என்பதால் அவர்களுக்கு மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். எனது தாத்தா இறந்த பிறகு, எனது பாட்டியின் மருத்துவக் கட்டணத்தை செலுத்துவதற்காக எனது பெற்றோர் அந்த வீட்டை விற்று விட்டனர். தற்போது அந்த வீட்டை நான் அவர்களுக்கு பரிசாக அளித்திருக்கிறேன்.

ஜெசிகா ஆல்பா மற்றும் அவரது தந்தை

இந்த வீட்டை கசித்தமாக்க பல மாதங்கள் உழைத்தேன். எங்களது மரபு இந்த வீடுதான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பெற்றோரை மகிழ்வித்த ஜெசிக்காவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.