4-09-2024 மூன்றாம் பிறை தரிசன மந்திரம்.
வானத்திலிருந்து என்றாவது நம் வீட்டிற்கு மட்டும் செல்வமழை பொழியாதா, என்று நினைத்துப் பார்க்காத மனிதர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ஆமாங்க, இன்று மூன்றாம் பிறை தரிசனம். சந்திர பகவானை தரிசனம் செய்வது, அந்த ஈசனை தரிசனம் செய்வது போல. அந்த ஈசனை நேரில் பார்த்து, தரிசித்து வேண்டிய வரங்களை கேளுங்கள்.
நிச்சயம் அந்த வரங்களை, அந்த ஈசன் உங்களுக்கு இன்றைய தினத்தில் கொடுப்பான். வானத்திலிருந்து செல்வம் மழை, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் உங்களை நோக்கி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை படிக்க தொடரலாம்.
4-09-2024 மூன்றாம் பிறை தரிசனம்
இன்று மாலை மூன்றாம் பிறை தரிசனம் உங்களுக்கு தெரிந்தாலும் சரி அல்லது மேக மூட்டங்கள் காரணமாக சந்திர பகவானை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும் சரி, நீங்கள் வெட்டவெளியில் நின்று மேற்கு திசையை பார்த்தவாறு சந்திரனையும், ஈசனையும் நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த வழிபாடு உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.
மனக்குழப்பத்தை தீர்த்து வைக்கும். கடன் சுமையை குறைக்கும். வருமானத்தை பெருக்கி தரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்று வானத்தைப் பார்த்து நீங்கள் சொல்ல வேண்டிய சந்திரன் மந்திரம் இதோ உங்களுக்காக.
சந்திரன் மந்திரம்
ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ !
வெட்ட வெளியான இடத்தில் நின்று கொண்டு மேற்கு திசை நோக்கி இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். வெட்ட வெளியில் உங்களால் அமர முடியும் என்றால் கீழே ஒரு பாய் அல்லது விரிப்பு விரித்து அமர்ந்தும் இந்த மந்திரத்தை சொல்லலாம். இரண்டு கைகளையும் ஏந்திக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என்றால் உள்ளங்கைகளில் வெள்ளை நிற பூ அல்லது பச்சரிசி அல்லது ஐந்து ரூபாய் நாணயம் இதில் ஏதாவது ஒரு பொருளை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு வானத்தில் இருக்கும் பிறை நிலவைப் பார்த்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.
மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள். இந்த பரிகாரத்தை செய்தால் இந்த மந்திரத்தை சொன்னால் நம்முடைய பிரச்சனை தீரும் என்ற நம்பிக்கையோடு வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த சந்திர பகவானின் ஆசியோடு ஈசனின் ஆசீர்வாதமும் பெறப்பட்டு உங்களுக்கு கூடிய விரைவில் நல்லது நடக்கும், சக்தி வாய்ந்த இந்த எளிமையான பரிகாரத்தை அனைவரும் செய்து பலன் அடையலாம்.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை தீர்க்கும் பழம்
அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், வெட்டவெளிக்கு வர முடியாது என்பவர்கள் எல்லாம், இருந்த இடத்திலிருந்து இன்று மாலை 6:30 மணிக்கு ஒரு நிமிடம் சந்திரனை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னாலும் போதும். உங்கள் வேண்டுதல் பலிக்கும், அதில் எந்த சந்தேகமும் கிடையாது. முடிந்தால் கையில் ஏதாவது ஒரு தங்க ஆபரணம் அல்லது வெள்ளி ஆபரணம் வைத்து இந்த மந்திரத்தை சொல்லி, அந்த தங்க நகையை கொண்டு போய் துவரம் பருப்பு டப்பாவில் போட்டு வையுங்கள். மேலும் மேலும் செல்வச் செழிப்பில் நீங்கள் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெரவும்.
The post 4-09-2024 மூன்றாம் பிறை தரிசன மந்திரம். appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.