தமிழக மீனவர்கள் 12 பேருக்கு… தலா ரூபாய் 1.5 கோடி அபராதம்… இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா 1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த 12 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூபாய் 1.5 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மீனவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த 12 மீனவர்களையும் வருகிற 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில் தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய தொகையாக 1.5 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறி இருக்கின்றது.

The post தமிழக மீனவர்கள் 12 பேருக்கு… தலா ரூபாய் 1.5 கோடி அபராதம்… இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…! first appeared on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.