12-ம் வகுப்பு மாணவரை 25 கி.மீ. துரத்தி சுட்டுக்கொன்ற பசு பாதுகாவலர்கள்... ஹரியானாவில் விபரீதம்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் பகுதியில் 12ம் வகுப்பு மாணவரைப் பசு கடத்தல்காரர் எனத் தவறாக நினைத்து, 25 கிலோமீட்டர் காரில் துரத்திச் சென்று சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பாட்டுள்ளனர்.

ஆர்யன் மிஸ்ரா என்ற 19 வயது மாணவர் ஆகஸ்ட் 23-ம் தேதி நள்ளிரவில் தனது நண்பர்கள் இருவருடன் காரில் நூடுல்ஸ் சாப்பிட சென்றிருக்கிறார்.

`பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட கும்பலுக்கு பசுக்கள் கடத்தப்படுவதாகவும், பசு கடத்தல்காரர்கள் டஸ்டர், ஃபார்டுனர் போன்ற எஸ்.யு.வி கார்களில் கண்காணிப்பு நடத்துவதாகவும் தவறான தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து, அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படேல் சவுக் அருகில் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

காரில் வந்த துரத்திவந்த அந்த கும்பல், ஆர்யன் இருந்த காரை நிறுத்தும்படி சைகை செய்துள்ளனர். ஆர்யனின் நண்பரான ஹர்ஷித் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்க ஆர்யன் முன்னிருக்கையிலும் அவர்களது நண்பர்கள் ஷன்கி மற்றும் இரண்டு பெண்கள் பின்னிருக்கையிலும் அமர்ந்துள்ளனர். ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தங்களை வழிமறிப்பதைக் கண்டதும் இவர்கள் பயந்தனர்.

ஹர்ஷித் மற்றும் ஷன்கி இதற்கு முன்னர் ஒரு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஷன்கி மீது காவல்துறையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்களது முந்தைய தகராறு காரணமாக யாரோ துரத்துவதாக எண்ணி, தப்பிப்பதற்காக வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தியிருக்கிறார் ஹர்ஷித்.

இதனால் முன்னாள் சென்ற வாகனம் நிச்சயம் பசு கடத்தல்காரர்களுடையது என எண்ணி, 25 கிலோமீட்டர்கள் துரத்தியிருக்கின்றனர். இடையில் வந்த டோல்கேட்டையும் உடைத்துச் சென்றிருக்கின்றனர். பசு பாதுகாவலர் கும்பல் பின்னால் இருந்து சுட்டதில் குண்டு ஆர்யனைத் தாக்கியுள்ளது.

சுட்டுக் கொலை

வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த ஹர்ஷித் ஆர்யனைக் காப்பாற்ற முயல, அதற்குள் ஆர்யன் நெஞ்சில் அடுத்த குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே ஆர்யன் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தில் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரவ் என்ற நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஃபரிதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு ஹரியானாவின் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகச் சந்தேகத்தின் பேரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். கொலையில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.