Japan: சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 40,000 முதியவர்கள்; தனிமையில் தவிக்கும் ஜப்பான்; ஐ.நா., சொல்வதென்ன?
ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இளம் தலைமுறையினருக்குத் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஜப்பான் ஆணாதிக்கம் செலுத்தும் சமூகமாக இருந்து வருவதாகவும், அதனால் பெண்கள் திருமண வாழ்க்கையைப் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பெண்கள் வேலைக்குச் சென்று, சுயமாக முன்னேறி வருவதால், திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. ஜப்பானின் குறைவான மக்கள்தொகையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால், ஜப்பான் அரசு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில்தான், மிக அதிக முதியவர்கள் இருக்கும் நாடான ஜப்பானில், ஐ.நா., சபையில் அறிக்கையின் படி, மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
அதில், இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும், சுமார் 40,000 பேர் தங்கள் வீடுகளில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதில், சுமார் 4,000 பேர் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களில் 130 பேர் ஒரு வருடத்துக்குப் பிறகுச் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக ஜப்பானின் தேசிய காவல்துறை அளித்த தரவுகளில், "65 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய முதியவர்கள் 37,227 பேர் வீட்டில் இறந்து கிடந்தனர். இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தனியே வசித்தவர்கள். இதில், 40 சதவிகிதம் பேர் இறந்த ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டனர். 3,939 உடல்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


