Netflix: ``கடின உழைப்பு வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை -நெட்ஃபிக்ஸ் இணை நிறுவனர்

கடின உழைப்புதான் வெற்றிக்கு வழி என தொடந்து போதிக்கப்பட்டுவரும் நிலையில், கடின உழைப்பால் வெற்றி என்பது வெறும் கட்டுக்கதை என நெட்ஃபிக்ஸ் இணை நிறுவனர் மார்க் ராண்டால்ப் தெரிவித்திருக்கிறார். `The Diary of a CEO with Steven Bartlett எனும் போட்காஸ்ட்டில் பேசிய மார்க் ராண்டால்ப், ``பெரும்பாலும் வெற்றிகரமாக முன்னேறுகிற சி.இ.ஒ-க்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு ஒரே மாதிரியான திறன் உள்ளது. அதுதான், எந்த பிரச்னைக்கு முதலில் தீர்வு தேவை என்பதை முன்னுரிமைப்படுத்தும் திறன். அதற்கெல்லாம் கடின உழைப்பு தேவையில்லை.

மார்க் ராண்டால்ப்

வெற்றிக்கு கடின உழைப்புதான் வழிவகுக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றே நான் நினைக்கிறேன். எனக்கு பல சிக்கல்கள் இருக்கிறது என்றால், நான் எந்த பிரச்னைக்கு கவனம் செலுத்துகிறேன் என்பதை மிகவும் புத்திசாலித்தனத்துடன் முடிவு செய்வதில்தான், என் வெற்றிக்கான வித்தியாசம் இருக்கிறது. இதில் நான் கோட்டைவிட்டால் எனது வெற்றிக்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும். ஆரம்பத்தில், நம் தயாரிப்புகளால் வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் சிரமங்களை, வாடிக்கையாளர் கவனிப்பதற்கு முன்பே அதை சரியாகச் செய்ய வேண்டும் என முயற்சிப்பேன்.

ஆனால் காலப்போக்கில், வாடிக்கையாளர்களின் சிரமம் என நான் நினைத்தவை எல்லாம், அந்த தயாரிப்பை மெருகூட்ட பயன்பட்டாதே தவிர அதில், வடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே, ஒரு திட்டத்தை செயல்படுத்த தொடங்கி, அது பரிபூரணமடைவதற்கு முன்பே, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்கத் தொடங்கினேன். அப்போதுதான், இது நல்ல யோசனையா, இதில் இருக்கும் சிக்கல்கள் என்பது போன்ற அதிமுக்கிய தீர்வு, வாடிக்கையாளரின் எதிர்ப்பார்ப்பு என எல்லாவற்றையும் அறிய முடியும்.

மார்க் ராண்டால்ப்

கடினமாக உழைத்து, அந்த திட்டத்தை முழுமை படுத்தியபிறகு அதில் வரும் சிக்கல்களை சரி செய்வது என்பது எப்படி வெற்றிக்கு வழிவகுக்கும். இது போன்ற சோதனைகளில் ஒன்றுதான் Netflix பயன்படுத்தும் பயனரை அதிகரிக்க செயல்படுத்திய திட்டம். நெட்ஃபிக்ஸை குறைவாக பயன்படுத்தும் பயனர், அவரின் அனுபவத்திற்கு ஏற்ப சந்தா செலுத்தும் திட்டங்களை செயல்படுத்தினோம். அதன்மூலம் அதிக பயனர்களை ஈர்த்தோம். இது பயனரை அதிகரி உதவிய ஒரு எளிய தீர்வாகும். 2014-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் ஒரு ஆய்வு தகவலை வெளியிட்டது.

அதில், நீங்கள் ஒரு வேலை செய்துமுடிக்க 50 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் உற்பத்தித்திறன் குறைகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தி, அவர்கள் உங்கள் வேலையைப் பற்றிய கருத்தைத் தெரிவிக்கும் வகையிலான கால அட்டவணையைப் பயன்படுத்தினால், உங்களின் உற்பத்தி திறன் பலமடங்கு அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.