Underwear Gang: உள்ளாடையுடன் வீட்டுக்குள் நுழைந்து திருடும் கும்பல்; மக்கள் அச்சம், போலீஸ் விசாரணை
நாட்டின் பல்வேறு இடங்களில் `உள்ளாடை கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இக்கும்பல் பெண்களின் உள்ளாடையான கவுன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்று திருடுவது வழக்கம். நாசிக் மாவட்டம், மாலேகாவில் கவுன் அணிந்து கொண்டு கடந்த வாரம் ஒரு கும்பல் திருட்டு வேலையில் ஈடுபட்டது. அக்கும்பல் கவுன் அணிந்து கொண்டு கையில் கூரிய ஆயுதங்களுடன் சென்று மாலேகாவில் பல்வேறு வீடுகளில் திருடியிருந்தது. இதனால் மாலேகாவ் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அக்கும்பல் கைவரிசை காட்டிய அடுத்த சில நாள்களில்... அதாவது நேற்று, உள்ளாடை அணிந்து ஒரு கும்பல் மாலேகாவில் வீடு புகுந்து திருடி இருக்கிறது.
இக்கும்பல் திருடியபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
உள்ளாடை கும்பல் கைவரிசை
மாலேகாவ் நகரில் நேற்று இரவு குடியிருப்புப் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த வாழைப்பழத்தை திருடிச் சென்றது. பூட்டி இருந்த வீட்டை திறந்து அவர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது திருடர்கள் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு வீடு புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.
தற்போது திருடிய கும்பலுக்கும், ஏற்கெனவே கடந்த வாரம் கைவரிசை காட்டிய கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், போலீஸாரின் கவனத்தை திசை திருப்ப இது போன்று உள்ளாடை அணிந்து திருடினார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


