கோயில் யானையின் சிறுவன்: இயக்குநர் சீனு ராமசாமியின் புதிய கவிதை நூல் வெளியீடு!
சீனு ராமசாமி எழுத்தில் விகடன் பிரசுரம் பதிப்பித்துள்ள `கோயில் யானையின் சிறுவன் நூல் வெளியாகியிருக்கிறது.
திரைப்பட இயக்குநரும், கவிஞருமான சீனு ராமசாமி, நெகிழ்ச்சியான தனது நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களின் வழியே மக்களிடம் கவனம் பெற்றவர். இவரது எழுத்தில் `புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை, `காற்றால் நடந்தேன், `மாசி வீதியின் கல் சந்துகள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் சீனு ராமசாமியின் புதிய படைப்பான `கோயில் யானையின் சிறுவன் நூல் விகடன் பிரசுரமாக வெளியாகியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, எழுத்தாளரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் எழுத்தாளர் அ.குமரேசன், கவிஞர் இரா.தெ.முத்து, நடிகர் ஏகன், தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து, நாகராஜ், நடிகர் நிறைமதி ஆகியோர் நூல் அறிமுகம் செய்தனர்.
டாக்டர் அருளானந்து தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம், Oakland திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கவிஞர். சீனு ராமசாமி இந்தக் கவிதை நூலை வாங்குவதற்கு... இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் - கோயில் யானையின் சிறுவன்
சீனு ராமசாமி கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தமான வரியைக் கமென்ட்டில் குறிப்பிடுங்கள்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


