Cyber Crime: பயம் வேண்டாம்... ஆன்லைனில் எளிதாக புகார் அளிக்கலாம்.. எப்படி?! | How to

என்ன தான் மொபைல் போனும், இணையமும் நம் வாழ்க்கையை கிளிக்குகளில் எளிதாக்கிவிட்டாலும், அதில் நெகட்டிவ் பக்கங்கள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆம்...இன்று பாமரர்கள் தொடங்கி ஐ.டியில் பணியாற்றுபவர்கள் வரை சைபர் கிரைம்களை அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வருகிறார்கள்.

சமூக ஊடகங்கள், பண பரிவர்த்தனை ஆப்கள் என எதில் பார்த்தாலும் சைபர் கிரைம்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் இன்னமும் பலர் சைபர் கிரைம்களை புகார் செய்ய தயங்குகின்றன. சில வேளைகளில் பெண்களால் தங்களுக்கு நடந்த பிரச்னையை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை. அவர்களிடம், நேரில் சென்று புகார் செய்ய வேண்டுமே என்ற தயக்கமும், நம் அடையாளம் தெரிந்துவிடுமோ என்கிற பயமும் இருந்துக்கொண்டே இருக்கிறது.

சைபர் கிரைமா? இந்த வலைபக்கத்திற்குள் செல்லவும்...

ஆனால், சைபர் கிரைம் புகார்களை பொறுத்தவரை, இந்த மாதிரி எந்த பயமும் தேவையில்லை. நமது அடையாளம் சிறிதும் கூட வெளிவராமல் சைபர் கிரைம் புகார்களை எளிதாக ஆன்லைனிலேயே பதிவு செய்யலாம். அதற்கான வழிகாட்டி இதோ...

https://cybercrime.gov.in/ என்ற வலைபக்கத்திற்குள் செல்லவும்.

அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்கள், நிதி குற்றங்கள், வேறு சைபர் குற்றங்கள் என மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்களை அடையாளம் குறிப்பிடாமல் புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. - இதில் எந்த பிரிவில் புகார் அளிக்கிறீர்களோ, அதை கிளிக் செய்யவும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்களுக்கு புகார் செய்ய...

தற்போது வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள புகார் வகை, சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம், மாநிலம், மாவட்டம், காவல் நிலையம், சம்பவம் எந்த வலைபக்கத்தில் நடந்தது? ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும்.

மேலும் எந்த வலைப்பக்கத்தில் நடந்ததோ, அந்த வலைபக்கத்தின் லிங்க் மற்றும் சம்பவம் நடந்ததற்கான ஆவணம் ஆகியவற்றை சமர்பிக்கவும்.

சம்பவத்தை பற்றிய கூடுதல் விவரங்களை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடவும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நிரப்பியவுடன் Save and Next-ஐ கிளிக் செய்யவும்.

அடுத்து வரும் Suspect Details-ல் குற்றம் சாட்டப்பட்டவர் குறித்து குறிப்பிட்டு Save and Next கொடுத்து வரும் Preview-ஐ பார்த்து captcha-வை போட்டு சமர்பித்து விடவும்.

அப்போது உங்கள் புகார் பதிவாகிவிடும்.

How to| Cyber Crime: ஆன்லைனில் புகாரளிப்பது எப்படி?!

நிதி மற்றும் மற்ற குற்றங்களுக்கு புகார் செய்ய...

New User என்று பதிவு செய்து, உங்கள் பெயர், ஊர், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து ரெஜிஸ்டர் செய்துக்கொள்ளவும்.

மற்றப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுகள் புகார் செய்ய என்ன வழிமுறையோ, அதே வழிமுறை தான்.

புகார் செய்துவிட்டோம்...நடவடிக்கை எடுத்துவிட்டார்களா? என்பதை தெரிந்துக்கொள்ள, அதே வலைதளத்தில் உள்ள Track your Complaint கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளலாம். அதில், நீங்கள் புகார் செய்தப்போது கொடுத்த Acknowledgement no-ஐ பதிவிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.