Tamil News Live Today: Paralympics 2024 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

Paralympics 2024 : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

நிதேஷ் குமார்

பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் தொடரில், பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். இந்தியா இதுவரை 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வசப்படுத்தியிருக்கிறது!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது - சி.பி.சி.ஐ.டி நடவடிக்கை!

நில மோசடி வழக்கு தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் சகோதரர் எம்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கிறார்.

எம்.ஆர்.சேகர்

இந்த நிலையில், அண்மையில் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் எம்.ஆர்.சேகர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானதுல்லா கான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அமானதுல்லா கான் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லி வக்பு வாரிய நியமனங்களில் அமானதுல்லா கான் பணமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை இந்தச் சோதனை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மறுபக்கம், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை குறித்து அமானதுல்லா கான் எக்ஸ் தளத்தில், சோதனை என்ற பெயரில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய வந்திருப்பதாகக் காலையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமானதுல்லா கானை அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து காரில் அழைத்துச் செல்லும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது கைது நடவடிக்கையா அல்லது விசாரணையின் ஒரு பகுதியா என்பது அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னரே தெரியவரும்.

#WATCH | Delhi: AAP MLA Amanatullah Khan detained by ED officials.

ED had arrived at his residence to conduct a raid, earlier today. pic.twitter.com/X07XN2Tpaa

— ANI (@ANI) September 2, 2024

Vaazhai: "உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் வலியையும் பேசுகிறது" - வாழை குறித்து முதல்வர் ஸ்டாலின்

"உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!" என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…

— M.K.Stalin (@mkstalin) September 2, 2024

Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் - வழக்குப் பதிந்த காவல்துறை

Jharkhand

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் சிலர் ஊக்க மருந்து உபயோகித்திருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்னர் எனர்ஜி ட்ரிங்குகளை குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாகவும் இருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர். இறந்தவர்கள் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் (unnatural death)" வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.