சென்னை: ரயில் நிலையத்தில் பெண் இன்ஜினீயரிடம் அத்துமீறல்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி பெண் இன்ஜினீயர் ஒருவர் தன்னுடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு பெண் இன்ஜினீயரிடமும் அவருடன் இருந்த ஆண் நண்பரிடம் விசாரனை நடத்தினார். பின்னர் பெண் இன்ஜினீயரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் அந்த நபர். அதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஜினீயர் அங்கிருந்து ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். இதையடுத்து அந்த நபரைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் மது போதையிலிருந்ததும், மேலும் அவர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கமலக்கண்ணன் எனவும் தெரிந்தது.

சஸ்பெண்ட்!

இதையடுத்து பெண் இன்ஜினீயர் கூறிய தகவலையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்ககையில் சம்பந்தப்பட்ட காவலர் கமலக்கண்ணன், மதுபோதையில் பெண் இன்ஜினீயரிடம் அநாகரிகமாக நடந்தது உறுதியானது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் உத்தரவின்பேரில் காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.