கறிவேப்பிலையின் 10 பலன்கள்..! #Curryleaves #Healthtips
1. கறிவேப்பிலையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள `கார்பசோல்’ ஆல்கலாய்டுகள், செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, புற்றுநோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.
2. உடலில் பித்தம் அதிகமாகி தலைச்சுற்றல் வந்தால், அதை கறிவேப்பிலைத் துவையல் சரி செய்யும்.
3. நீரிழிவால் உண்டாகும் பாதிப்புகளைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கறிவேப்பிலை உதவும்.
4. நல்ல கொழுப்பை அதிகரித்து, டிரை கிளிசரைடுகளின் அளவை கறிவேப்பிலை குறைக்கும்.
5. குடல் பகுதியின் ஆரோக்கியத்தை அதிகரித்து, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கறிவேப்பிலை குறைக்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.
6. தாளித்த கறிவேப்பிலையின் மணமும் சுவையும் எச்சிலின் சுரப்பை அதிகரித்து, செரிமானத்துக்கு வழிவகுக்கும்.
7. கறிவேப்பிலையை அரைத்து, எலுமிச்சைச்சாற்றுடன் கலந்து குடித்தால், பயணங்களின்போது வரும் வாந்தி, குமட்டல் உணர்வுகள் காணாமல்போகும்.
8. கறிவேப்பிலையின் ஈர்க்குகளைப் பொடியாக்கி சமையலில் சேர்த்து வந்தால், ரத்த சோகை சரியாகும்.

9. கறிவேப்பிலையை உலர்த்திப் பொடித்து மிளகு, சீரகம், சுக்குத்தூள், சோம்பு சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் கலந்து, நெய்விட்டு குழைத்துச்சாப்பிட்டால் வயிறு மந்தம், வாய்வுக்கோளாறுகள் நீங்கும்.
10. கறிவேப்பிலைப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்து அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டுவர, ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


