jayasurya: `பொய்யான துன்புறுத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்வது வேதனையானது... - நடிகர் ஜெயசூர்யா

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நாள்முதல், மலையாள சினிமா உலகின் பல பிரபலங்கள் மீது நடிகைகள் முன்வைக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. சித்திக், ரஞ்சித், எம்.எல்.ஏ முகேஷ் என பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

jayasurya - ஜெயசூர்யா

இதில், மலையாள பிரபல நடிகரும், தமிழில் வசூல்ராஜா போன்ற படங்களில் நடித்தவருமான ஜெயசூர்யா மீது இரண்டு பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், உண்மையை விட பொய் வேகமாகப் பயணிக்கும் என்றும், ஆனால் உண்மைதான் வெல்லும் என்றும் ஜெயசூர்யா தற்போது தெரிவித்திருக்கிறார்.

ஜெயசூர்யா, தனது பிறந்தநாளான நேற்று இன்ஸ்டாகிராமில், ``என்னுடைய தனிப்பட்ட வேலை காரணமாக நானும், எனது குடும்பத்தினரும் கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் இருக்கிறோம். இந்த நேரத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக என் மீது இரண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. மனசாட்சி இல்லாத எவருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது எளிது. பொய்யான துன்புறுத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்வது வேதனையானது.

jayasurya - ஜெயசூர்யா

பொய் எப்போதும் உண்மையை விட வேகமாகப் பயணிக்கும். ஆனால், உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். நம் நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் அமெரிக்காவில் எனது வேலைகளை முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன். அதையடுத்து, நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும், இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையானதாக மாற்றப் பங்களித்தவர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.