`60 தொகுதிகள் போதும்’ - கழற்றிவிடப்படும் அச்சத்தில் தொகுதியை குறைத்துக்கொண்ட அஜித் பவார்!
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால் மாநில அரசு நலத்திட்டங்களை நிறைவேற்ற வசதியாக தேர்தல் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இத்தேர்தலில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தது. அதேசமயம் பா.ஜ.க கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் நீடிப்பதற்கு பா.ஜ.கவிற்குள் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் திடீரென அஜித் பவார் தனது கோரிக்கையை அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார். 80 தொகுதிகள் கேட்டுக் கொண்டிருந்த அஜித் பவார் திடீரென அந்த எண்ணிக்கையை 60 ஆக குறைத்துவிட்டார். சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க அஜித் பவார் தனது கட்சி நிர்வாகிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் பேசிய அஜித் பவார் தேர்தலில் 60 தொகுதியில் போட்டியிட தயாராகுங்கள் என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ``கடந்த சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதியில் வெற்றி பெற்றது. அதோடு சேர்த்து மேலும் 6 தொகுதியில் போட்டியிட தயாராக வேண்டும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் நமது கட்சியில் சேர இருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்க இருக்கிறது.என்றார். ஏற்கனவே மும்பையில் பாந்த்ரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.சீசன் சித்திக் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர இருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்த பிறகு 54 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.கவும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. கட்சி நிர்வாகிகள் மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ராவ் சாஹேப் தன்வேயை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதோடு முக்கிய தலைவர்கள் தலைமையில் தேர்தலுக்காக மேலும் 16 புதிய கமிட்டிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த கூட்டம் வரும் 13ம் தேதி நடைபெற இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


