கூடலூர்: அரசு பேருந்தையே கடத்த முயற்சித்த பலே ஆசாமிகள்... ஷாக்கான போக்குவரத்து கழகம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரியசோலை கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் இரவு 9 மணிக்கு அரசு பேருந்தை கரியசோலை கிராமத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் காலை 6 மணிக்கு மேல் பேருந்து சேவை தொடங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு கூடலூரில் இருந்து கிளம்பிய அரசு பேருந்தை கரியசோலை கிராமத்தில் நிறுத்தியுள்ளனர். பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அறையில் ஓட்டுநரும் நடத்துநரும் உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை வந்து பார்த்தபோது பேருந்தை காணவில்லை. இதனால் பதறிய இருவரும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்து

பேருந்தை தேடி அலைந்துள்ளனர். சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பேருந்தை ஓட்டிச் சென்று பாதி வழியில் நிறுத்திச் சென்றருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக கரியசோலை கிராமத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர், "வழக்கமாக பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் இருந்து நேற்றிரவு யாருக்கும் தெரியாமல் பேருந்தை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள், 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் டீ பகுதி சாலையில் நிறுத்திச் சென்றுள்ளனர். பேருந்து அருகிலேயே இருசக்கர வாகனம் ஒன்றும் நிற்கிறது. பேருந்தை கடத்திச் செல்லும் நோக்கத்தில் செய்தார்களா அல்லது மது போதையில் செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.