Hema Commitee: படப்பிடிப்பு தளத்தில் பாலியல் அத்துமீறலா? நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு
ஹேமா அறிக்கை மூலம் வெளியான பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. நடிகர் மோகன் லால் தலைமையிலான அம்மாநில நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கின்றனர். முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் என வரிசையாக 7 பேர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
அதில், என் மன வானில், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், மனதோடு மழைக்காலம், சக்கர வியூகம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவரும் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவருமான ஜெயசூர்யா மீது ஏற்கனவே 3 பிரிவுகளின் கீழ் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டாவது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு தொடுப்புழாவில் நடந்த படப்பிடிப்பின்போது தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகப் புகார் அளித்திருக்கிறார் அந்த நடிகை. அதன் அடிப்படையில் ஜெய்சூர்யா மீது இந்த இரண்டாவது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


