Insurance: லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு குட் நியூஸ்... இனி செலவு குறையும்..!

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறப்பான தகவல் வெளியாகியுள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டியில் விலக்கு அளிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். இதனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு தொடர்ந்து ஜி.எஸ்.டி விதிக்கப்படும்.

Term Insurance - டேர்ம் இன்ஷூரன்ஸ்

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்:

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term Insurance), முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் (ULIP) என இரண்டு வகையான திட்டங்கள் இருக்கின்றன.

டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் முழுக்க முழுக்க பயனாளியின் குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு தருவதற்காக இருக்கின்றன. டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களில், பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். பாலிசியின் காலம் (பொதுவாக 10 முதல் 30 ஆண்டுகள்) முடிவடைவதற்கும் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்துக்கு நிதி கிடைக்கும். ஒரு வேளை, பாலிசி காலத்துக்குள் பாலிசிதாரர் இறக்கவில்லை எனில், எந்தவொரு பணமும் கிடைக்காது. டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் பாதுகாப்புக்கான திட்டம் மட்டுமே தவிர, அதில் சேமிப்பு, முதலீடு போன்ற அம்சங்கள் ஏதும் இல்லை.

முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் பிரீமியம் அதிகம். இந்தத் திட்டங்களில் ஆயுள் காப்பீடு மட்டுமல்லாமல், முதலீட்டு வசதியும் இருக்கும். அதாவது, பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், பாலிசியில் முதலீட்டு வசதி இருப்பதால், அதன் மதிப்பும் உயர்ந்துகொண்டே போகும். இப்படி இரண்டு வசதிகளுமே இருப்பதால், முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு பிரீமியம் அதிகம்.

ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி விலக்கு:

இந்த நிலையில், டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு ஜி.எஸ்.டியில் விலக்கு அளிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி விலக்கு அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒருவேளை ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கபட்டால், டேர்ம் இன்ஷூரன்ஸ் முதலீட்டில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. முதலீடு சார்ந்த லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு தற்போது 18 சதவிகித ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.