kangana: என் படத்தை பாதுகாக்க கோர்ட்டுக்கு கூட செல்வேன்!- எமர்ஜென்சி குறித்து கங்கனா ரனாவத்

நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் எமெர்ஜென்சி.

இந்தப் படம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமெர்ஜென்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத்தே நடித்திருக்கிறார். கடந்த 14-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எமெர்ஜென்சி - கங்கனா as இந்திரா காந்தி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் சென்சார் போர்டு, எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்காதது குறித்து பேசிய கங்கனா, ```எமர்ஜென்சி’ படத்திற்கு சென்சார் போர்டு தனக்கு சான்றிதழ் வழங்கவில்லை. அது சரியான நேரத்தில் வரும் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் சான்றிதழ் வழங்கவில்லை என்றால் அதற்காக போராடவும், தனது படத்திற்காக நீதிமன்றம் செல்லவும் உறுதியாக இருக்கிறேன்.

சரியான நேரத்தில் எனது படம் வெளியாகும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், " வரலாற்றை மாற்றி மிரட்டல் மூலம் உங்களால் எங்களை பயமுறுத்த முடியாது. வரலாற்றை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். ஏறக்குறைய 70 வயதுப் பெண்மணியை ( இந்திரா காந்தி ) அவரது வீட்டில் 30-35 முறை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

கங்கனா ரனாவத்

அதனை மக்களுக்கு காட்ட வேண்டும். ஆனால் அதனை அவ்வாறே காட்சிப்படுத்தினால் சிலருக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அப்படி நினைத்தால் வரலாற்றை மக்களுக்கு நாம் எப்படி காண்பிக்க முடியும்?” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.