Gold Rate: பண்டிகைக் காலம் வரிசைக்கட்டுகிறது... தங்கம் விலை குறையுமா?!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகம் ஏறாமல் சற்று நிலையாகவே இருந்து வருகிறது. இது பண்டிகை காலத்தை எதிர்நோக்கி இருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்துள்ளது.
இனி அடுத்த வரவிருக்கும் 15 நாள்களில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை என பண்டிகைகள் வரிசைக் கட்டி நிற்கின்றது. இந்த சூழலில் தங்கம் இப்போதே வாங்கலாமா அல்லது இன்னும் குறையுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்...
இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தை மற்றும் அதன் போக்கை வைத்தே அமைகின்றன. தற்போது சர்வதேச சந்தையில்...
முதிர்ந்த முதலீட்டாளர்கள், புதிய முதலீட்டாளர்கள் என இரு தரப்பினருமே சமீபத்தில் தங்கத்தில் தான் அதிக முதலீடுகள் செய்து வருகின்றனர்,
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது,
மத்திய வங்கிகள் பாதுகாப்பான முதலீடாக தங்கங்களை வாங்கி குவிக்கின்றன,
உலகளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்து அச்சம் நிலவி வருகிறது,
தேவைக்கு ஏற்ப தங்கம் உற்பத்தி இன்னும் அதிகரிக்கப்படவில்லை.

இப்படி ஏற்கனவே நிலவி வரும் பொருளாதார நிலைமையே தான் இப்போதும் தொடர்ந்து வருகின்றபடியால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் தான் தங்கம் அதே விலையில் வர்த்தகம் தொடர்ந்து வருகிறது. இனி தங்கத்தின் விலை மாற்றம் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது சர்வதேச அளவில் வேறு ஏதாவது காரணங்களினாலோ மாற்றம் ஏற்பட வேண்டும்.
தற்போது இருக்கும் நிலையில் தங்கம் விலை குறையும் என்று கூறமுடியாது. அதனால் சர்வதேச அளவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே விலை சரிய வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

