இந்தியாவில் வேகம் எடுக்கும் சண்டிபுரா வைரஸ்… 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு…!
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சண்டிபுரா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கின்றது.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வேகமாக சண்டிபுரா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கின்றது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிஸ்டிஸ் சிண்ட்ரோம் என்கின்ற மூளை அலர்ஜி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் இதுவரை 82 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிஸ்டிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தருவாயில் இருக்கின்றது.
எனினும் தற்போது இந்த பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் குஜராத்தில் ஒவ்வொரு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகின்றது. கொசுக்கள் பூச்சி வகைகளால் இந்த தொற்று பரவுகின்றது. இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்று கூறி வருகிறார்கள்.
The post இந்தியாவில் வேகம் எடுக்கும் சண்டிபுரா வைரஸ்… 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு…! first appeared on Tamilnadu Flash News.மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

