10 மாதங்களில் 3 குழந்தைகள்… ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்… வியக்க வைக்கும் ஆஸ்திரேலியா பெண்…!
10 மாதங்களில் வெவ்வேறு பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்று ஆஸ்திரேலியா பெண் வியக்க வைத்திருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் சரிதா ஹோலண்ட். இவருக்கு வயது 41 திருமணமான இவர் கர்ப்பமாகி இருக்கின்றார். இவருக்கு பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கின்றது. பின்னர் பத்து வார இடைவெளியில், அதாவது குழந்தை பிறந்து 2 மாதத்தில் சரிதா மீண்டும் கர்ப்பமாகி இருக்கின்றார்.
குறுகிய காலத்தில் தான் கர்ப்பமடைந்தது குறித்து டாக்டர்களிடம் ஆலோசித்த போது இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று கூறி இருக்கிறார்கள். சரியாக 30 வாரங்கள் ஐந்து நாட்கள் கழித்து சரிதா ஹோலண்ட்க்கு மீண்டும் பிரசவ வலி எடுத்திருக்கின்றது. ஆபரேஷன் மூலம் நடந்த பிரசவத்தில் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இரண்டு மாதங்கள் குறை பிரசவத்தில் அந்த குழந்தைகள் பிறந்திருக்கின்றது. ஆனால் தாயும் சேயும் நலமுடன் வீடு திரும்பியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை ஹோலண்ட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் ஒரு பெண் ஒரு குழந்தையை பெற்ற இரண்டாவது மாதத்தில் மீண்டும் கர்ப்பம் தரித்து எட்டாவது மாதத்தில் மேலும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கின்றார். எனவே பத்து மாதங்களில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
The post 10 மாதங்களில் 3 குழந்தைகள்… ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்… வியக்க வைக்கும் ஆஸ்திரேலியா பெண்…! first appeared on Tamilnadu Flash News.
View this post on Instagram
A post shared by S A R I T A (@saritaholland)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

