ம.பி: தலித் பெண், சிறுவனைத் கொடூரமாத் தாக்கிய போலீஸ்; அதிர்ச்சி ஏற்படுத்தும் வீடியோ! - என்ன நடந்தது?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்த ஜனவரி தரவுகளின்படி, 2022-ல் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் 57,428-ஆக இருந்த நிலையில், அது 2023-ல் 13 சதவிகிதம் அதிகரித்து 57,582-ஆகியிருக்கிறது. இவ்வாறிருக்க, பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேசத்தில், கட்னி அரசு ரயில்வே போலீஸ் (GRP) காவல் நிலையத்தில் பட்டியலின பெண்ணையும், அவரின் 15 வயது பேரனையும் போலீஸ் அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

தலித் மீது போலீஸ் அதிகாரிகளின் தாக்குதல் - மத்தியப் பிரதேசம்

அந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, 2023 அக்டோபரில் இந்த வீடியோ பதிவாகியிருக்கிறது. இதில், கட்னி GRP காவல் நிலைய பொறுப்பாளர் அருணா வாகனே மற்றும் பிற அதிகாரிகள் பட்டியலின பெண்ணையும், 15 வயது சிறுவனையும் போலீஸ் லத்தியால் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். பாதிக்கபட்டர்வர்கள் இருவரும், ஜாரா திகுரியாவைச் சேர்ந்தவர்கள். இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில், காவல் நிலைய பொறுப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து எஸ்பி-ரயில்வே ஜபல்பூர் (SP Railway Jabalpur) X சமூக வலைதளப் பக்கத்தில், ``இந்த சம்பவமானது கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. இதில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பிரபல ரவுடி தீபக் வன்ஷ்கரின் உறவினர்கள். தீபக் வன்ஷ்கர் மீது கட்னி உள்ள GRP காவல் நிலையத்தில் 19 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 2017 முதல் அவர் கண்காணிப்பில் இருக்கிறார். திருட்டு வழக்கில் தலைமறைவான இவரைப் பிடிப்பவருக்கு 10,000 ரூபாய் பரிசு என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

தலித் மீது போலீஸ் அதிகாரிகளின் தாக்குதல்

இந்த ஆண்டு ஏப்ரலில், அவரைக் கட்னியிலிருந்து வெளியேற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, கட்னி GRP காவல் நிலையப் பொறுப்பாளர் நீக்கப்பட்டு, ரயில்வே துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

இன்னொருபக்கம், இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆளும் பாஜக அரசைச் சாடியிருக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, ``கட்னி சம்பவம் முழு மத்தியப் பிரதேசத்தையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க-வின் தவறான ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

कटनी की वीभत्स घटना से पूरा मध्य प्रदेश स्तब्ध है। एक दलित माँ - बेटे को भाजपा के वर्दी वाले गुंडों ने बंद कमरे में लाठी से पिट पिट कर अर्धमृत कर दिया है। भाजपा के कुशासन में मध्य प्रदेश के दलित भयावह जीवन जीने को मजबूर हैं। अगर मुख्यमंत्री अपने प्रदेश के लोगों की सुरक्षा नहीं कर… https://t.co/nB79pT797Y

— Jitendra (Jitu) Patwari (@jitupatwari) August 28, 2024

முதல்வரால் தனது மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியாவிட்டால், உடனடியாக பதவி விலக வேண்டும். சாகர், சட்னா, நரசிங்பூர், அசோக்நகர் மற்றும் அதைத் தொடர்ந்து தற்போது கட்னி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் மோகன் யாதவின் திறன் மற்றும் நோக்கம் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்புகின்றன" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.