Amevi superyacht: ரூ.1037 கோடியில் உலகின் விலையுயர்ந்த படகு; இந்திய கோடீஸ்வரரின் `மிதக்கும் மாளிகை!

இந்திய கோடீஸ்வரர்களில் பலர், தனியார் ஜெட் விமானங்களில் மட்டுமே முதலீடு செய்து வருகின்றனர். முகேஷ் அம்பானி, கௌதம் சிங்கானியா, அனில் அம்பானி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே ஆடம்பர படகுகளை சொந்தமாக வைத்துள்ளனர். அதிலும் 73 வயதான இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் வைத்திருக்கும் படகுதான் உலகின் மிக விலை உயர்ந்த படகு. லக்ஷ்மி மிட்டல், தனது அசாதாரண சொகுசு படகின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ArcelorMittal நிறுவனம் இவருடையது.

ஆர்சிலர் மிட்டலின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,35,282 கோடி ஆகும்.

Amevi boat

லக்ஷ்மி மிட்டலின் விலை உயர்ந்த அமேவி படகு அவரின் கோடீஸ்வர வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். இந்தப் படகின் விலை சுமார் ரூ.1,037 கோடியாகும். 262 மீட்டர் நீளமுள்ள இந்தப் படகு, பல ஆடம்பர அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சொகுசுப் படகு புகழ்பெற்ற இன்டீரியர் டிசைனர் ஆல்பர்டோ பின்டோவால் 2007- ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. பிரபல இத்தாலிய படகு வடிவமைப்பு நிறுவனமான ஸ்டுடியோ நுவோலாரி லெனார்ட் நிறுவனம் இந்தப் படகை உருவாக்கியது.

Lakshmi Mittal

இந்த ஆடம்பர படகான அமேவியில் சூடான நீச்சல் குளம், சினிமா ஹால், உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் அறை, ஹெலிபேட், 8 வி.ஐ.பி அறைகள் உள்ளன. இதில் 16 பேர் தங்கலாம். இங்கு உள்ள 10 கேபின்களில் 22 பணியாளர்கள் தங்கலாம்.

இந்த ஆடம்பர படகில் இரட்டை டீசல் MTU (16V 595 TE70) 16-L பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள சக்திவாய்ந்த இன்ஜின் மூலம் 14 நாள்கள் வரை அதிவேக பயணம் மேற்கொள்ள முடியும்.

ஃபோர்ப்ஸின் 2023-ம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 169-ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 166-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.