`வங்கிக் கணக்குகளை பயன்படுத்தாமலேயே வைத்திருக்கிறீர்களா? - Fraud Alert... எச்சரிக்கும் RBI!

நம் அனைவரிடமும் பணப்பை இருக்கிறதோ இல்லையோ, வங்கிக் கணக்கு இல்லாத ஒருவரையும் நம்மால் காண முடியாது. இந்தியாவில் 2021 கணக்கின்படி 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 78% பேரிடம் வங்கிக் கணக்கு உள்ளது என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதில் நம்மில் பலர் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். அதேபோல் இக்கணக்குகள் சில பயன்பாட்டில் இல்லாமலும் இருக்கும். இது போன்ற பயன்பாட்டில் இல்லாத பல வங்கிக் கணக்குகள் பணமோசடிகளுக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளன. இக்கணக்குகளை மியுள் அக்கவுன்ட் (Mule Account) என்று நிதி உலகில் சொல்வர். இவற்றை அந்தக் கணக்குகளின் உரிமையாளர்களை ஏமாற்றியோ அல்லது அவர்களின் அனுமதியுடனோ பண மோசடிக் கும்பல் பயன்படுத்தி வருகின்றன.

ரிசர்வ் வங்கி

இது போன்ற மோசடிகள் ஜம்தாரா, மகாபலேஷ்வர் போன்ற வட மாநில நகரங்களில் அதிகம் நடந்தாலும், தென் இந்தியாவில் சில நகரங்களிலும் இது பரவிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இவ்வகையான மோசடிகள் 10 மடங்கு ஏறிவிட்டதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கிடையில் வெகு நாள்களாகப் பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் ரிசர்வ் வங்கியும், நிதி சார்ந்த அரசு அலுவலகங்களும் மும்முரம் காட்டி வருகின்றன. இது போன்ற பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் மூலம் நடக்கும் பண மோசடிகளையும், ஆன்லைன் நிதி மோசடிகளையும் தடுக்க உரிய முயற்சிகளை வங்கி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேணுமென்று, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக... உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் சைபர் க்ரைம் கன்ட்ரோல் சென்டருடன் தொடர்ந்து இயங்கி வருகிறார் அவர்.

வங்கிகள்

"இது போன்ற வங்கிக் கணக்குகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற சில குறிப்பிடத்தக்க ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன், நிதி நிறுவனங்களின் ஒருமைப்பாட்டையும் குறைக்கிறது. இது போன்ற கணக்கின் உரிமையாளர்கள் தங்கள் முழு அறிவோடும், அனுமதியோடும், சட்டவிரோதச் செயல்களுக்கு வாடகை விடுவதால், இது போன்ற கணக்குகளை கண்டறிவது இன்னும் கடினமாகிறது. எனவே வங்கிகளுக்கு பணப் பரிமாற்றத்தை சிறந்த முறையில் கண்காணிக்க பாதுகாப்பு அமைப்புகள் தேவை" என்று அடையாள சரிபார்ப்பு தளமான IDfy-ன் இணை நிறுவனர் & CEO அசோக் ஹரிஹரன் கூறுகிறார். ஆன்-போர்டிங் கட்டத்தில் சந்தேகத்திற்கிடமான கணக்குகளை வங்கிகள் கொடியிட(flagging) வேண்டும் என்றும், ``இந்தக் கணக்குகளுக்கான உங்கள் வாடிக்கையாளர் தேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கடுமையாகப் பரிந்துரைக்கிறேன்" என்றும் ஹரிஹரன் கூறுகிறார்.

இழந்த நிதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றங்களைக் கண்டாலும், இதன் அளவு மோசடிகளின் அளவை விடக் குறைந்து இருக்கிறது என்பதே நிதர்சனம். மீட்கப்பட்ட தொகை 2020 நிதியாண்டில் ரூ.12 கோடியில் இருந்து 11 மடங்கு உயர்ந்து, நிதியாண்டில் ரூ.139 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மீட்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. 2023-24ல் மொத்த மோசடித் தொகைகளில் 9.5 சதவிகிதம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2019-20-லிருந்து 9.3 சதவிகிதத்திலிருந்து சிறிது அதிகரித்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.