Telegram Pavel Durov: `காதலியா... உளவாளியா?- டெலிகிராம் நிறுவனர் கைதில் சந்தேகிக்கப்படும் இளம்பெண்!
உலகளவில் 90 கோடி பயனர்களைக் கொண்ட டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த சனிக்கிழமையன்று, பிரான்ஸ் விமான நிலையத்தில் அந்நாட்டு போலீஸ் அதி2ரிகளால் கைதுசெய்யப்பட்டார். முன்னதாக, டெலிகிராம் செயலியில் போதைப்பொருள் கடத்தல் தகவல்களைப் பகிர்தல், குழந்தைகளின் பாலியல் வீடியோக்களைப் பகிர்தல் போன்ற குற்றவியல் செயல்களில் ஈடுபடும் பயனர்களை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாக பாவெல் துரோவ்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையிலேயே, பாவெல் துரோவுக்கு எதிராக பிரான்ஸ் போலீஸ் கைதுவாரன்ட் பிறப்பித்து இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும், `ஒரு செயலியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அந்தச் செயலியையோ அல்லது அதன் உரிமையாளரையோ காரணம் கூறுவது அபத்தமானது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டுதான் இந்தச் செயலி செயல்படுகிறது என்று டெலிகிராம் தரப்பு கூறுகிறது. தற்போது பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீஸாரின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜூலி வவிலோவா (Juli Vavilova) எனும் 24 வயது இளம்பெண்ணுக்கு இந்தக் கைது நடவடிக்கையில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் கிளம்பியிருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் பிரெஞ்சு தனியுரிமை தரவு ஆராய்ச்சியாளர் பாப்டிஸ்ட் ராபர்ட், ``ஜூலி வவிலோவாவின் சமூக வலைதளப் பதிவுகள் இந்தக் கைது நடவடிக்கையில் நேரடியாக முக்கிய செயலாற்றியதா என்று கூறுவது கடினம். இருப்பினும், அவரின் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பாவெல் துரோவ் எங்கு செல்கிறார் போன்ற செயல்பாடுகளை நீங்கள் எளிதாகக் கண்காணிக்க முடியும்" என்று ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில் பாவெல் துரோவ் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் என செல்லுமிடங்களில் ஜூலி வவிலோவாவும் உடனிருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தனி ஜெட் விமானத்தில் இருப்பது போன்று ஜூலி வவிலோவா முன்பு பதிவிட்ட புகைப்படத்தில் இருக்கும் ஜெட் விமானம் பாவெல் துரோவுக்குச் சொந்தமானது என்றும், பிரான்ஸ் விமானத்தில் அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு அவர் வந்திறங்கிய ஜெட் விமானம் அதுதான் என்றும் கூறப்படுகிறது.
The woman who accompanied Pavel Durov, the founder of Telegram on his journey that led to his arrəst is Juli Vavilova
— TaraBull (@TaraBull808) August 26, 2024
In Azerbaijan, Juli & Pavel even honed their target shootıng skills. pic.twitter.com/MsLJM01CKo
இதனாலேயே, ஜூலி வவிலோவா அவரின் காதலியாக இருக்கலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகிறது. மேலும், தனிப்பட்ட முறையில் கிரிப்டோ பயிற்சியாளர், வீடியோ கேம் ஸ்ட்ரீமர் போன்ற அடையாளங்களை ஜூலி வவிலோவா கொண்டிருக்கிறார். தற்போது பாவெல் துரோவ் விவகாரத்தில் இவர்மீது இவ்வளவு சந்தேகங்கள் எழுவதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாள்களாக இவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக, ஜூலி வவிலோவா காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இவையனைத்தையும் மொத்தமாகப் பார்க்கும்போது, பாவெல் துரோவ் ஹனி-ட்ராப் (Honey Trap) செய்யப்பட்டிருக்கிறாரா, ஜூலி வவிலோவா உளவாளியா போன்ற மர்ம சந்தேகங்கள் நீள்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


