பாலியல் வன்கொடுமை; சிறையிலிருந்து வந்தும் சித்ரவதை செய்த நபர் - விபரீத முடிவெடுத்த பெண்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள பத்லாப்பூர் பள்ளியில் சமீபத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், குற்றவாளியின் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவை சேர்ந்த 17 வயது மைனர் பெண் தற்காலிகமாக தனது தாயாருடன் அருகில் உள்ள தகிவாடி என்ற இடத்தில் 11வது வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்பெண்ணை சுக்ராம்(23) என்ற வாலிபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுக்ராம் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தான்.
சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு மீண்டும் அப்பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனது துன்புறுத்தல் தாங்காமல் அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அப்பெண் தற்கொலை செய்த அதேநாளில் சுக்ராமை கைது செய்தனர்.
ஆனால் சுக்ராமும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணும் காதலித்ததாகவும், வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ததாகவும் சுக்ராம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக அப்பெண் வேறு ஒருவரை விரும்புவதாகவும், அதனை தன்னை உதாசீனப்படுத்துவதாகவும் சுக்ராம் நினைத்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது என்றும் சுக்ராம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுக்ராம் உறவினர்கள் தெரிவித்துள்ள கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


