9 ஆண்டுக் கால காதல் போராட்டம்; அந்தமான் காதலியைக் கரம் படித்த குன்னூர் இளைஞர்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள சேலாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ். ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். பணி நிமித்தமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் தீவிற்குச் சென்றிருக்கிறார். சிலகாலம் அங்குத் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்தமானைச் சேர்ந்த மோனி பென்னுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் தொடர்பாக இருவரும் குடும்பத்தில் கூறியிருக்கிறார்கள். ஆனால், இரு குடும்பமும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்ய வேண்டும் என இருவருமே காத்திருந்துள்ளனர்.
குடும்பத்தினர் பார்த்த வரன்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளனர். இதனால், மனமிறியங்கிய பெற்றோர், திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்தமானிலிருந்து மோனியை அவரது பெற்றோர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். உற்றார், உறவினர்கள் சூழ, 9 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இருவரும் கரம் பற்றியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காதல் கைகூடியது குறித்துப் பேசிய புதுமண தம்பதிகள், "காதலுக்கு எல்லைகள் கிடையாது. கடல் தாண்டிய எங்கள் காதல் கைகூட 9 ஆண்டுகள் தேவைப்பட்டது. விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


