ஹேமா கமிட்டி அறிக்கை: இதில் மலையாளத் திரையுலகம் சிறப்பாகச் செயல்படுகிறது! - நடிகை பார்வதி

மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

திரைப்பட வாய்ப்புகள் தொடர்பாகப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து அத்துமீறுவது எனப் பல அதிர்ச்சியான தகவல்கள் இந்த அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆய்வறிக்கையை கேரள அரசியிடம் நீதிபதி ஹேமா சமர்பித்தார்

இதில் மலையாளத் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பெயர்கள் அடிபட்டுள்ளதால் மலையாளத் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர். நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக் உட்படப் பலரும் தங்கள் நடிகர் சங்கப் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் மலையாளத் திரையுலகையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.

நடிகை பார்வதியின் ஸ்டோரி

அவ்வகையில், நடிகை பார்வதி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "மலையாளத் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா திரைத்துறையிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. ஆனால், இங்கு நமக்கு நீதி கேட்டு, உதவிட நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் அனைவரும் நன்றி கூற வேண்டும். அந்தவகையில் மலையாள திரையுலகு மற்ற திரையுலகைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.