கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்: பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு கவனிப்பா?! - வைரலாகும் புகைப்படம்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் , அவரின் ரசிகர் ரேணுகாசுவாமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம், நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமீபமாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் தர்ஷன்

இதற்கு முன்னர், நடிகர் தர்ஷன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ``வீட்டில் சமைத்த உணவு, படுக்கை வசதி, உணவு மேசையில் பயன்படுத்துவதற்கான பொருள்கள் வழங்க வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ``சிறையில் அனைத்து குடிமக்களும், விசாரணைக் கைதிகளுக்கும் சத்தான உணவுக்குத்தான் உரிமை உண்டு. அவர்களின் சமூக அல்லது நிதி நிலை அடிப்படையில் எந்தவித வேறுபாடும் காட்டப்படாது." எனக் குறிப்பிட்டு அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்தான் அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் தர்ஷன் ஒருவருடன் வீடியோ கால் பேசும் வீடியோவும் வெளியாகியிக்கிறது. 25 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் நடிகர் வெளிச்சமான அறையில் அமர்ந்திருப்பதும், அவருக்குப் பின்னால் சுவரை மூடும் பெரிய திரைச்சீலைகள், கொக்கியில் சில ஆடைகள் தொங்குவதும் பதிவாகியிருக்கிறது.

இந்த விவகாரங்கள் குறித்து பேசிய ரேணுகாசுவாமியின் தந்தை காசிநாத், ``இந்த விஷயத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். தர்ஷன் மற்றவர்களுடன் சிகரெட் பிடித்து, டீ குடிப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சிறையில் இருக்கிறாரா அல்லது ஏதேனும் ரிசார்ட்டில் இருக்கிறா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது.

நடிகர் தர்ஷன்

எனது மகனை இழந்ததன் வலி எனக்குத் தெரியும்... நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால் தர்ஷன் சிறையில் இருந்தும் சொகுசு வாழ்வை அனுபவித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது... இன்னும் எங்களுக்கு காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது வைரலாகி வரும் இந்தப் புகைப்படம் குறித்து விசாரணை நடத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.