Nagarjuna: சட்டவிரோதமாக என் கட்டடம் இடிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது! - நாகர்ஜுனா
நாகர்ஜுனாவுக்குச் சொந்தமான பிரமாண்ட அரங்கு இடிக்கப்பட்டது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
ஹைதராபாத்தில் உள்ள மாதாப்பூர் என்ற பகுதியில் தம்மிடி குந்தா என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் ‘N Convention’ என்ற பெயரில் அரங்கம் ஒன்றை நடிகர் நாகர்ஜுனா கட்டியிருந்தார். இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ள இடத்தில் சுமார் 3.5 ஏக்கர் தம்மிடி குந்தா ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக எழுந்த புகார் எழுந்திருக்கிறது.
அந்தப் புகாரின் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 24) அந்த அரங்கம் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நடிகர் நாகர்ஜுனா ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டு விளக்கம் அளித்திருக்கிறார்.
அந்தப் பதிவில், "சட்டவிரோதமாக எனது N Convention அரங்கம் தரைமட்டமாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. நாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. ஏரியின் இடம் சிறிதும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்ட சட்டவிரோத நோட்டீஸ்க்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Pained by the unlawful manner of demolition carried out in respect of N Convention, contrary to existing stay orders and Court cases.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 24, 2024
I thought it fit to issue this statement to place on record certain facts for protecting my reputation and to indicate that we have not done any…
தற்போது தவறான தகவலை மையமாக வைத்து அரங்கம் தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நீதிமன்றம் எனக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே கட்டடத்தை இடித்திருப்பேன். தவறான நடவடிக்கைக்காக நிவாரணம் கோரப்படும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


