சென்னை: 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - புரட்சி பாரத கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது குழந்தையை அவரின் அம்மா, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து வந்தார். மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னுடைய மகளின் தலையில் அடிப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் பிறப்புறுப்பு உள்பட சில இடங்களில் காயங்கள் இருந்தன. அதுகுறித்து குழந்தையின் அம்மாவிடம் விசாரித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். குழந்தையின் அம்மாவிடமும் அவரின் கணவரான புரட்சி பாரத கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குழந்தைக்கு ரவி பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. அதனால் ரவியின் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். குழந்தையின் அம்மா அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். கைதான ரவி, புதுச்சேரி புரட்சி பாரத கட்சியில் மாநில தலைவராக கடந்த 2021-ம் ஆண்டில் இருந்திருக்கிறார்.
பின்னர் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததோடு ரவியை உறுப்பினர், பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது. இருப்பினும் புரட்சி பாரத கட்சியின் பெயரை ரவி தொடர்ந்து பயன்படுத்தி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் போக்சோ வழக்கில் புரட்சி பாரத கட்சியின் நிர்வாகி ரவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதுகுறித்து புரட்சி பாரத கட்சி தலைமை வெளியிட்ட அறிக்கையில் ரவிக்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவரை கடந்த 2021-ம் ஆண்டே கட்சியிலிருந்து நீக்கி விட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


