Peacock curry: YouTube வியூஸுக்காக `மயில் கறி கிரேவி’ - வழக்கு பதிவு செய்த தெலங்கானா வனத்துறை!
தெலங்கானா மாநிலத்தின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் யூடியூபரான கோடம் பிரனய் குமார். இவர் உணவு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் தொடர்ந்து வீடியோ பதிவிட்டும் போதுமான லைக்ஸ், வீவ்ஸ் கிடைக்கவில்லை என எண்ணி இருக்கிறார். அதனால் வித்தியாசமாக ஏதாவது செய்தால் பார்வையாளர்களை அதிகரிக்கலாம் எனக் கருதி, இந்தியாவின் தேசிய பறவையான மயில் கறி கிரேவி எப்படி செய்வது என ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் குழு தங்கலப்பள்ளி கிராமத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அந்த நபரின் வீட்டில் இருந்து கறியை மீட்டு, மாதிரி தடயவியல் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கின்றனர்.
இது தொடர்பாக அந்த நபர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் பதிவிட்ட அந்த வீடியோவும் யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்திருக்கிறது. எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


