Arshad Nadeem: சகோதரிகள் படிக்க எங்கள் நகரத்திலேயே பல்கலை., வேண்டும்- தங்கம் வென்ற அர்ஷத் கோரிக்கை

அடிப்படை வசதிகள் இல்லாத தனது ஊருக்குச் சில வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கம் வென்றார். 2015-ம் ஆண்டு முதல் ஈட்டி எறிதலில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். கானேவால் என்கிற கிராமம்தான் அவரின் சொந்த ஊர். எறிவதற்கு ஈட்டியே இல்லாத, ஆடுவதற்கு மைதானமே இல்லாத ஒரு சூழலிலிருந்துதான் அவர் வந்திருக்கிறார்.

Arshad Nadeem

அர்ஷத்தின் தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஊர் மக்கள்தான் கூட்டாகச் சேர்ந்து பணம் வழங்கி அவரை வெளியூர் போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைத்திருக்கிறார்கள். தங்கம் வென்று தனது ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். பாகிஸ்தான் அரசு 10 கோடி பரிசு வழங்கி அவரைக் கௌரவித்திருக்கிறது.

அந்த ஊர் மக்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது ஊருக்குச் சில வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்குச் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார் அர்ஷத்.

Arshad Nadeem

"எனது கிராமத்திற்குச் சாலை வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். சமையல் எரிவாயுவை அரசாங்கம் வழங்கினால், அது எனக்கும் எனது கிராமத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல எங்கள் நகரத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்துத் தர வேண்டும். அதனால் எங்கள் சகோதரிகள் அதிக தூரம் சென்று படிக்க வேண்டிய அவசியம் இருக்காது." என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.