வெளியேறிய காதல் ஜோடி; காதலனின் சகோதரியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த காதலியின் குடும்பம்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, குடும்பத்தாரின் எதிர்ப்பை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஊரை விட்டு வெளியேறியது. பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறினர். இதனால் பெண்ணின் தந்தை மற்றும் அவரது சகோதரர் கடும் கோபத்தில் இருந்தனர். வெளியேறிய தம்பதியை தேடி பெண்ணின் தந்தை ரவீந்திர சிங், அவரது மகன் அமன் சிங், ரவிந்திர சிங் சகோதரர் வீரேந்திர சிங் உட்பட 4 பேர் குறிப்பிட்ட வாலிபரின் சகோதரி வீட்டுக்கு சென்றனர். சகோதரியின் வீடு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கிறது. வீட்டில் வாலிபரின் திருமணமான 31 வயது சகோதரி மட்டும் இருந்தார்.
அப்பெண்ணை நான்கு பேரும் சேர்ந்து சித்ரவதை செய்ததோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்தனர். அதோடு அச்செயலை அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது. ஆனால் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் அப்பெண் தொடர்ந்து அதிர்ச்சியில் இருந்தார். அதோடு இது குறித்து போலீஸில் புகார் செய்தால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்.
தற்போது அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ள அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


