`போதிய ஆதாரம் இல்லாததால்..!’ - சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகாரளித்ததோடு சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது குற்றம் சாட்டினர். அதனால் நசரத்பேட்டை போலீஸார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ஹேம்நாத், ஜாமீனில் வெளியில் வந்தார். இதையடுத்து சித்ராவின் குடும்பத்தினர் சட்ட போராட்டம் நடத்தினர். அதனால் இந்த வழக்கு நசரத்பேட்டை காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட ஹேம்நாத் மீது குற்றப்பத்திரிக்கையை திருவள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நடிகை சித்ரா

இதற்கிடையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பிரிக்கப்பட்டு, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உதயமானது. அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவிலிருந்த நடிகை சித்ராவின் மரண வழக்கு ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதுதொடர்பான ஃபைல்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதனால் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகை சித்ராவின் வழக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று (10.8.2024) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்யஉள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.