சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு!

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் குடும்பத்துடன் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். பொன்.மாணிக்கவேல், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய காலக்கட்டத்தில் சிலைக்கடத்தல் கும்பல் மீதும் வெளிநாட்டிலிருந்த சிலைகளை தமிழகத்துக்கும் கொண்டு வரப்பட்டதால் அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவித்தது. இந்தநிலையில்தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றிய காதர் பாஷா உள்ளிட்ட சிலர் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சிலைகளை விற்றதாக போலீஸ் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

அதோடு மட்டுமல்லாமல் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் டீம் அதிரடியாக டி.எஸ்.பி காதர் பாஷா உள்ளிட்ட சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றம் சுமத்தப்பட்ட டி.எஸ்.பி காதர் பாஷா உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பொன்.மாணிக்கவேல் வீடு

இந்தநிலையில் டி.எஸ்.பி காதர் பாஷா, கடந்த சில ஆண்டுகளாக சட்டப்போராட்டத்தை நடத்தி வந்தார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள், எஃப்.ஐ.ஆர்-க்கள், குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என டி.எஸ்.பி காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காதர் பாஷா மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டது.

அடுத்து டி.எஸ்.பி. காதர் பாஷா, தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி யார் மீது தவறு இருக்கிறது என கண்டறிய உத்தரவிட்டது. அதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில் ஒருகட்டமாகதான் சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.