கோவை: டிஜிட்டல் முறையில் ரூ.25 லட்சம் லஞ்சம்... சிக்கிய மேட்டுப்பாளையம் சார் பதிவாளர்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தாராளமாக புழங்குகிறது என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய அந்த சோதனை, நேற்று காலை வரை தொடர்ந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்த சோதனையில், சார்பதிவாளர் சாந்தி மற்றும் அவரது உறவினர்களின் வங்கிக் கணக்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.25,33,880 லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில், இந்தப் பணம் மக்களிடம் லஞ்சமாக பெறப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மாறியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் சார்பதிவாளர் சாந்தி, அலுவலக ஊழியர் பிரவீன் குமார் மற்றும் கார் ஓட்டுநர் ராஜா ஆகியோர் கையும், களவுமாக சிக்கியுள்ளனர்.

சாந்தி

அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  லஞ்ச நெட்வொர்க்குக்கு இடைத்தரகராக செயல்பட்ட நவீன்குமார் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் கணினி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அலுவலகத்தில் பரவலாக லஞ்சம் பெறும் செயல் நடைபெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.  “மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 100 பத்திரப் பதிவுகள் நடக்கும்.

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சாந்தி ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்.’ என்று போலீஸார் கூறுகின்றனர். இதில் சம்மந்தப்பட்டுள்ள சாந்தி உள்ளிட்ட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.