Netherland: சொகுசு ஹோட்டல்களாக மாற்றப்படும் சிறைச்சாலைகள்; அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?
உலகின் பல நாடுகளின் சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டு, இடப்பற்றாக்குறை காரணமாக அரசு நிர்வாகங்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வரும் நிலையில், நெதர்லாந்து நாட்டில் தொடர்ந்து சிறைச்சாலைகள் மூடப்பட்டு வருவது, கவனம் பெற்றிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாந்து, ஐரோப்பாவில் அதிக சிறைவாசிகள் இருக்கும் ஒரு நாடாக அறியப்பட்டது. ஆனால் இப்போது மிகக் குறைந்த சிறைவாசிகள் இருக்கும் நாடு என்ற இடத்துக்கு நகரந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், அங்கு 19 சிறைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சிறைகள் அடுத்த ஆண்டு மூடப்பட உள்ளன.
சிறைகள் குற்றவாளிகள் இல்லாமல் காலியானதால், அவை வேறு பயன்பாட்டுக்கான இடமாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஆம்ஸ்டர்டாம் அருகில் இருக்கும் ஒரு சிறை ஆடம்பரமான ஹோட்டலாக மாற்றப்பட்டது. தி லாயர், தி ஜட்ஜ், தி கவர்னர், தி ஜெயிலர் என பீரிமியர் திட்டங்களுக்கு பெயரிடப்பட்ட நான்கு சிறைகள், கவனம் ஈர்க்கின்றன. இன்னும் பல சிறைகள் அகதிகள் முகாமாக மாற்றப்பட்டு, முன்னாள் சிறைக் காவலர்களுக்கு அதே முகாம்களில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
தி கார்டியன் செய்தியின்படி 2014 முதல், 23 சிறைகள் மூடப்பட்டு, தற்காலிக அகதிகள் மையங்களாகவும், வீடுகள் மற்றும் ஹோட்டல்களாகவும் மாறியுள்ளன. ஐரோப்பாவின் மூன்றாவது குறைந்த சிறைவாசிகள் விகிதம் உள்ள நாடாக நெதர்லாந்து மாறியிருக்கிறது. நீதி அமைச்சகத்தின் WODC ஆராய்ச்சி மற்றும் ஆவண மையத்தின்படி,

2018 காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களிலிருந்து 40 சதவிகிதம் குறைந்துள்ளது. லைடன் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பேராசிரியரான மிராண்டா பூன், சிறைவாசிகளின் சரிவு குறித்து ஆய்வு செய்துள்ளார். அது தொடர்பாக அவர், ``கடந்த 13 ஆண்டுகளில் சிறைவாசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இது ஓர் அற்புதமான மற்றும் மேற்கத்திய உலகில், இணையற்ற வளர்ச்சி. சுவாரஸ்யமாக, ஆம்ஸ்டர்டாமின் தெற்கில் காலியாக இருந்த சிறை ஒன்று ஆடம்பர ஹோட்டலாக மாற்றப்பட்டது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


