`குடும்பத்திற்கு வரவேற்கிறோம்! - நாக சைதன்யா, சோபிதா நிச்சயதார்த்தம் - நாகார்ஜுனா நெகிழ்ச்சி

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் நாக சைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா புகைப்படத்துடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் ஏ மாயா சேசாவே, மனம், மஜிலி ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா

இதனைத்தொடர்ந்து மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வந்த நாக சைதன்யா, சமந்தா இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா- சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் நாகார்ஜுனா புகைப்படத்துடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. … pic.twitter.com/buiBGa52lD

— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024

சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள்!" என்று நாக சைதன்யா- சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.