காலை காதல் கல்யாணம்... மாலை மனைவியைக் குத்திக் கொலைசெய்த கணவர்... என்ன நடந்தது?

கர்நாடகாவில் திருமணமான அடுத்த சில மணிநேரங்களிலேயே மனைவியைக் கணவன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, உயிரிழந்தவரின் பெயர் லிகிதா ஸ்ரீ (20) என்றும், கொலைசெய்தவரின் நவீன் (27) என்றும்

தெரியவந்திருக்கிறது.

லிகிதா ஸ்ரீ - நவீன்

இதில், கே.ஜி.எஃப் தாலுகாவிலுள்ளது சம்பரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவரான நவீனுக்கும், ஆந்திராவிலுள்ள பைனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த லிகிதா ஸ்ரீக்கும் நேற்று காலை திருமணம் நடந்திருக்கிறது. அதையடுத்து, புதுமணத் தம்பதி நவீனின் உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு தனி அறையில் விடப்பட்ட இருவருக்குள்ளும் திடீரென வாக்குவாதம் ஏற்படவே, லிகிதா ஸ்ரீயை நவீன் கத்தியால் குத்திவிட்டு, அதே கத்தியால் தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றிருக்கிறார். பின்னர், உறவினர்களால் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதில், மணமகள் ஏற்கெனவே மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மணமகன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழப்பு

இது குறித்து பேசிய கே.ஜி.எஃப் பகுதி எஸ்பி கே.எம் சாந்தராஜு, ``முதற்கட்ட விசாரணையில் இது காதல் திருமணம் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், தம்பதியினர் நவீனின் உறவினர் வீட்டுக்குச் சென்ற இடத்தில் தனி அறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, லிகிதா ஸ்ரீயை நவீன் கத்தியால் குத்தினார். அதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடைத்த லிகிதா ஸ்ரீயின் உடலைக் கண்ட நவீன் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக ஆண்டர்சன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.