ஜப்பான் EM, ரஷ்யாவின் அதிசய திரவம்... லாபம் கொழிக்கும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் பயிற்சி!

பசுமை விகடன், தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PRIST), தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர்கள் சங்கம்- தஞ்சாவூர்... ஆகியவை இணைந்து நடத்தும் லாபம் கொழிக்கும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள்- இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி... ஆகஸ்ட் 25-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, திருச்சி -தஞ்சாவூர் சாலையில், வல்லம் பகுதியில் இயங்கி வரும் பொன்னையா ராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் முனைவர் உதயகுமார் பயிற்சி அளிக்க உள்ளார்.

பயிற்சி அறிவிப்பு

இவர், ரஷ்யாவில் உள்ள பேட்லூம்பா பல்கலைக்கழகத்தில் வேளாண் உயர்கல்வி மற்றும் முனைவர் ஆய்வு படிப்பு பயின்றவர். திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, மலேசியா, தாய்லாந்து, ஹாலந்து, ஹங்கேரி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை நேரில் பார்வையிட்டு அறிந்தவர். ஜப்பான் நாட்டு தொழில்நுட்பமான இ.எம் என அழைக்கப்படும் திறன்மிகு நுண்ணுயிர் திரவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடம் அறிமுகம் செய்தவர்.

இ.எம்

ஆகஸ்ட் 25-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற உள்ள இந்தப் பயிற்சி வகுப்பில்.. குறைந்த  செலவில் இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு,  பலவிதமான பலன்கள் தரும் பொக்காஷி தயார் செய்தல், கூடுதல் விளைச்சல், குடிநீர் சுத்திகரிப்பு; ஆச்சர்யமான அயல் மின்ம திரவம் தயாரிப்பு, விளைச்சலைக் கூட்டும்.. பால் உற்பத்தியைப் பெருக்கும்; இ.எம் வளர்ச்சி ஊக்கி தயார் செய்தல், உப்புத்தன்மையைப் போக்கும், மகசூலைப் பெருக்கும் ஹெச்.பி-101 திரவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்  வேளாண் விஞ்ஞானி முனைவர் உதயகுமார் பயிற்சி அளிக்க உள்ளார்.

ஜப்பானில் இ.எம்

இதில் கலந்து கொண்டு பலன் பெற விரும்புபவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இயற்கை விவசாயத்தில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இப்பயிற்சி வகுப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும். கற்றது கையளவு... கல்லாதது உலகளவு... நம் முன்னோர்கள் சொன்ன இப்பொன்மொழி இயற்கை விவசாயத்திற்கும் நிச்சயம் பொருந்தும்.

க்யூ.ஆர் கோடு

பயிற்சியில் நோட்பேட், பேனா, தேநீர், மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பே.டி.எம்... போன்ற UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்.
அறிவிப்பில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும் அல்லது
UPI Id: vikatanmedia17590@icici யிலும் கட்டணம் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் உங்கள் முகவரியை 99400 22128 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும்.
மேலும் விவரங்களுக்கு, செல்போன்: 99406 51072,  94425 42915.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.