Elephant Death: அடுத்தடுத்து சரியும் பேருயிர்... மின்வாரியம் நடவடிக்கை எப்போது?!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக எல்லை பகுதியில் ஆண் யானை ஒன்று நடமாடி வந்தது‌. தொரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தை கடந்த மாதம் கடக்க முயன்ற போது சேற்றில் அந்த யானை சிக்கியது‌. முன்னங்கால்கள், தந்தங்கள் மற்றும் தும்பிக்கை ஆகிய உடல் பாகங்கள் சேற்றுக்குள் புதைந்த நிலையில், மூச்சுத்திணறலால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது‌. இந்நிலையில், கடந்த 30 -ம் தேதி கூடலூர் அருகில் உள்ள மச்சிக் கொல்லி பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் யானை ஒன்று அருகில் இருந்த பாக்கு மரத்தை சாய்க்க முயன்றபோது தாழ்வான மின் கம்பியில் மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அந்த ஆண் யானை உயிரிழந்தது.

உயிரிழந்த யானை

இந்நிலையில், முதுமலை எல்லை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் விளை நிலத்தைக் இன்று அதிகாலை கடக்க முயன்ற ஆண் யானையின் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து யானைகள் இறப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், "நாட்டில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. யானைகளிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் பாதுகாக்க பெரும் போராட்டமே நடந்து வருகிறது.

உயிரிழந்த யானை

மனித தவறுகளால் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் மற்றும் சட்டவிரோத மின்வேலிகளை மின்வாரியம் கண்டுகொள்வதில்லை. இதனாலேயே இது போன்ற இறப்புகள் தொடர்ந்து வருகின்றன " என்றனர்.

மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது குறித்து கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள், " வருவாய் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன், சட்டவிரோதமாக மின்வேலியும் அமைத்திருக்கிறார்கள். இந்த பகுதியை கடக்க முயன்ற சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறது.

உயிரிழந்த யானை

உடல் கூறாய்வின்போது யானையின் இதயத்தை ஆய்வு செய்தோம். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.