Vinesh Phogat: 100 கிராம் எடை குறைக்க தலைமுடியைக்கூட வெட்டினோம். ஆனாலும்... - ஊட்டச்சத்து நிபுணர்

100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

போட்டிகள் முடிந்தபிறகு சத்துக்காக அவர் எடுத்துக்கொண்ட உணவுகளும் பானங்களும் அவர் உடல் எடையை இரண்டு கிலோ அதிகரித்துவிட்டன. இதனால் ஒரே இரவில் இரண்டு கிலோ எடையைக் குறைக்க வேண்டிய நிலை. வினேஷ் எவ்வளவோ கடுமையாகப் பயிற்சிகளைச் செய்தும் அவரால் முடியவில்லை. இறுதிப் போட்டிக்கான புதன் கிழமை காலை எடைப் பரிசோதனையில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

வினேஷ் போகத்

இந்நிலையில், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வினேஷ் போகத்தின் ஊட்டச் சத்து நிபுணர் தின்ஷா பர்திவாலாவும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி உஷாவும் விளக்கம் அளித்திருக்கின்றனர்.

முதலில் இதுதொடர்பாக பேசிய ஊட்டச்சத்து நிபுணர் தின்ஷா பர்திவாலா, "வினேஷ் போகத்தின் தலைமுடியை வெட்டி உடல் எடையைக் குறைக்க முயன்றோம். இரவு முழுவதும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தோம். எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம்." என்று கூறியிருக்கிறார்.

தின்ஷா பர்திவாலா, பி.டி உஷா

அதன் பிறகு பேசிய பி.டி உஷா, "வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, கோரிக்கையும் வைத்துள்ளோம். மத்திய அரசும், இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் வினேஷ் போகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மருத்துவ உதவிகளையும், தார்மீக ஆதரவுகளையும் வினேஷ் போகத்துக்கு வழங்கி வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.