Bangladesh: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீட்டுக்கு `தீ - காரணம் என்ன?

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கடந்த ஒருமாதமாக போராட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, அது வன்முறைக் கலவரமாக மாறியது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். அதற்குமுன்பே, ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவில் நேற்று தஞ்சமடைந்தார்.

மஷ்ரஃபே மோர்தசா

இதற்கிடையில், நேற்று வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்தசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இவர் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது 117 போட்டிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில், 390 விக்கெட்களை வீழ்த்தி, 2,955 ரன்களை எடுத்திருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கில் சேர்ந்து 2018-ல் அரசியலில் நுழைந்தார். அப்போதுமுதல் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.