Wayanad: வி.ஐ.டி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.கோ. விசுவநாதன் ரூ.1 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் வகையில், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலசரி ஏற்பட்டுள்ளது, இந்த நிலசரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும் வயநாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவு

அந்தவகையில் இந்த துயரில் இருந்து மக்கள் விரைவில் மீண்டுவர வி ஐ டி பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை தலைமைசெயலகத்தில் சந்தித்து வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.கோ. விசுவநாதன் ரூபாய்.1 கோடிக்கான வரைவோலை (DD ) வழங்கினார். வி ஐ டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோரும் உடன் இருந்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.