செங்கல்பட்டு: வடமாநிலத் தொழிலாளியிடம் மிரட்டி பணம் பறிப்பு; காவலர் கைது!

திருப்போரூர் அருகே குன்னப்பட்டு கிராமத்தில் உள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் எனக் கூறி ஒருவர் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் பணத்தை இழந்த வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் வேலை செய்யும் கம்பெனியில் புகாரளித்தனர். அதனால் சம்பந்தப்பட்ட கம்பெனி தரப்பிலிருந்து மானாமதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர் ஒருவரை தாக்கி ஆயிரம் ரூபாய் பணம் பறிக்கப்பட்டதாக மானாமதி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து மானாமதி போலீஸார் சம்பந்தப்பட்ட வடமாநில தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். வடமாநில தொழிலாளரி கூறிய தகவலின்படி இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது மானாமதி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அஜித்குமார் எனத் தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மானாமதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் அஜித்குமார், ரோந்துப் பணியின் போது வடமாநில தொழிலாளரி ஒருவரை மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்திருக்கிறார். அப்போது பணத்தைக் கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளியை காவலர் அஜித்குமார் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் வந்ததும் காவலர் அஜித்குமாரைக் கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.