Game Of Thrones: கேரக்டரின் பெயரால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுப்பு!- பின்னணி என்ன?

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game Of Thrones) தொடரின் கதாபாத்திரப் பெயரை வைத்திருந்ததால் ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒன்று கேம் ஆஃப் த்ரோன்ஸ். ‘A Song of Ice and Fire’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர் கடந்த 2011-ம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், 2019ஆம் ஆண்டு 8வது சீசனோடு நிறைவடைந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

கலீஸி

இதில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களின் பெயர்களைப் பிறந்த குழந்தைக்குப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இதற்கு இருந்தது. அந்தவகையில் இந்த தொடரில் இடம்பெற்ற முக்கியமான கதாபாத்திரமான கலீஸி என்ற பெயரை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு வைத்திருக்கிறார். தற்போது 6 வயதாகும் அந்தச் சிறுமிக்கு அந்த பெயரை வைத்ததால் பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த லூசி அவரின் 6 வயது குழந்தையுடன் பாரீஸில் உள்ள டிஸ்னி லேண்டில் தன்னுடைய விடுமுறையைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவரின் மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்திருக்கின்றனர்.

ஆறு வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் மறுப்பு

கலீஸி என்ற பெயர் இருப்பதன் காரணத்தால் உங்கள் மகளின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதை கேட்ட லூசி மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.