Paris Olympics Live Updates : `89.34 மீ வீசி இறுதிப்போட்டியை எட்டிய நீரஜ்!; காலிறுதியில் வினேஷ் போகத்! - Day 11 Updates
அரையிறுதியில் வினேஷ் போகத்!
மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உக்ரைன் வீராங்கனையை 7-4 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற நீரஜ்!
நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டருக்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
களமிறங்கினார் நீரஜ்!
ஈட்டி எறிதலுக்கான தகுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா இப்போது களமிறங்கியிருக்கிறார்.
வினேஷ் போகத் மாஸ்!
வினேஷ் போகத் தோற்கடித்த ஜப்பானிய வீராங்கனை சுசாகி இதற்கு முன் வேறெந்த வெளிநாட்டு வீராங்கனையிடம் வீழ்ந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
வினேஷ் போகத் அசத்தல்!
மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை சுசாகியை 3-2 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
தகுதிச்சுற்றில் கிஷோர் ஜேனா!
இந்திய வீரர் கிஷோர் ஜேனா தனது மூன்று வாய்ப்புகளையும் வீசி முடிந்தார். அவரது சிறந்த எறிதல் 80.73 மீ
கிஷோர் ஜேனாவின் முதல் வீச்சு!
ஈட்டி எறிதலில் இந்திய வீரர் கிஷோர் ஜேனா தனது முதல் வாய்ப்பில் 80.73 மீ க்கு ஈட்டியை வீசியிருக்கிறார்.
நீரஜ் தகுதிபெற என்ன செய்யவேண்டும்? - விரிவான செய்தி கீழுள்ள லிங்க்கில்!
ஈட்டி எறிதல் தொடங்கியது!
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியின் தகுதிச்சுற்று போட்டி தொடங்கியிருக்கிறது. க்ரூப் A வை சேர்ந்த வீரர்கள் இப்போது ஆடி வருகின்றனர். இந்த க்ரூப்பில்தான் இந்திய வீரர் கிஷோர் ஜேனா இருக்கிறார். நீரஜ் சோப்ரா க்ரூப் B யில் இருக்கிறார். அவரது ஆட்டம் மாலை 3:20 மணிக்கு தொடங்குகிறது.
போட்டி அட்டவணை!



பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: இன்று இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை.
#Paris2024 | #IndiaAtParis2024 | #Olympics
பதக்கப்பட்டியல்
பத்தாம் நாள் முடிவில் பட்டியலில் 60-வது இடத்தில் இந்தியா!

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


