John Cena: அவரின் வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான்... - ஷாருக்கான் குறித்து நெகிழும் ஜான் சீனா!
பிரபல மல்யுத்த வீரரான ஜான் சீனா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
டபுல்யூ.டபுல்யூ.இ மல்யுத்தப் போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜான் சீனா. 90ஸ் கிட்ஸ்களின் ஹீரோவான இவர், அதில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். நடிகராகவும் உள்ள இவர், உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
மல்யுத்தப் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பின், தற்போது ஜாக்பாட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், அம்பானி வீட்டுத் திருமணத்தில் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானைச் சந்தித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த ஜான் சீனா, "ஷாருக்கான் Tedx Talks நிகழ்ச்சியில் மோட்டிவேஷனலாக பேசியிருந்தார். என் வாழ்க்கையின் கடினமான நேரத்தில் அந்த உரையைக் கேட்டேன். அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. அவரின் அந்த உரையைக் கேட்டபிறகுதான் என்னிடம் உள்ள பாசிட்டிவான விஷயங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டேன்.

என் வாழ்க்கையை மாற்றிய ஒருவரை நேரில் சந்தித்துக் கைக்குலுக்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்று ஷாருக்கான் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


