Paris Olympics 2024: விளம்பர கட்டணத்தை உயர்த்திய இந்திய வீராங்கனை... எத்தனை மடங்கு தெரியுமா..?

பாரிஸ் நகரில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்தியாவின் சார்பில் 117 பேர் கலந்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது வெற்றி உலகமெங்கிலும் பேசப்பட்டது. ஏன் ஏனெனில் மனுபாக்கர் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் ஒரு‌ வெண்கல பதக்கமும் மற்றும் ஆண் பெண் இரட்டையர் பிரிவிற்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் சரப்ஜாத் சிங் உடன் இணைந்து ஒரு‌ வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மனு பாக்கர்

2017 -ல் தான் அவருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் மீதே ஆர்வம் ஏற்பட்டது, தன்னுடைய மகளின் ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய ரூ.1.5 லட்சம் செலவு செய்து துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு அனுப்பினார் அவரின் தந்தை. தன்னுடைய 15 வயதிலேயே பல சாதனைகளுக்கு சொந்தக்கரரானார். இளம் வயதில், உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

மனு பாக்கர்

" கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பங்கேற்ற 3 பிரிவு போட்டிகளிலும் தவறு ஏற்பட்டதால் மனமுடைந்தேன். இந்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என நினைத்தாயோ, தாய்நாட்டுக்காக அதை செய்துவிடு என்று எனக்குள் கூறிக் கொண்டே இருந்தேன். அதுதான் எனக்கு உத்வேகமாக இருந்தது". ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனையான மனு பாகர் கூறிய வார்த்தைகளே இவை.

இந்நிலையில், மனு பாகரின் விளம்பர ஒப்பந்தக் கட்டணம் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்ந்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு 20 - 25 லட்சமாக இருந்த இந்த விளம்பரக் கட்டணம், 2 பதக்கங்களை வென்றதன் மூலம் தற்போது 5 - 6 மடங்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மனு பாகர் தரப்பை சார்ந்த நீரவ் டோமர் ( CEO and MD of IOS sports & Entertainment), " 2 - 3 நாட்களில் 40 நிறுவனங்கள் தங்களின் விளம்பரம் தொடர்பாக எங்களை (மனு பாகர் தரப்பு) அணுகியது, அதில் ரூ.1.5 கோடிக்கு ஒரு ஒப்பந்தம் முடிக்கப்பட்டுள்ளது.

மனு பாக்கர்

இது தனித்துவத்துடன் கூடிய ஒரு ஆண்டு கால ஒப்பந்தமாகும். மேலும், 1 மாதம், 3 தங்கள் கொண்ட குறுகிய கால டிஜிட்டல் செயல்பாடுகள் தொடர்பாக எங்களை அதிக நிறுவனங்கள் தொடர்புக்கொள்கின்றன. ஆனால்,நாங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா போன்று இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மனு பாக்கர் ஒரு தேசிய விளையாட்டின் அடையாளமாக திகழ்வார்" எனவும் கூறினார்.

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கரின் துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. ஆனால், துப்பாக்கியை மாற்றுவதற்கு நடுவர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. துப்பாக்கி சுடுதல் விளையாட்டே வேண்டாம் என மன உளைச்சலில் இருந்த மனு பாக்கரை மீட்டெடுத்து வந்தது அவரின் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா தான். மனு பாகர் போன்ற திறமையானவர்களுக்கு தேவை ஜாஸ்பால் ராணா போன்ற வழிகாட்டிகளே!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.